புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான பாணந்துறையில் பிரதான வீதியில் மட்டைத் தேள் ஒன்றால் பாரிய வாகன விபத்து நேர்ந்து உள்ளது.

பொறியியலாளர் ஒருவர் கப் வாகனத்தை ஓட்டிச் சென்று கொண்டு இருந்தார். இவரது சப்பாத்துக்களில் ஒன்றுக்குள் இருந்து ஏதோ ஒன்று சீண்டுவதை உணர்ந்து கொண்டார். Accelerator மீது சப்பாத்து இருந்தது.

வாகனத்தை செலுத்திக் கொண்டே சப்பாத்தை பார்வையிட்டார். சப்பாத்துக்கு உள்ளே இருந்து பெரிய மட்டைத் தேள் ஒன்று வெளியில் வர முயல்வதை அவதானித்தார். இந்நிலையில் இவரது கவனம் மட்டைத் தேள் மேல் போய் விட்டது.

இந்நிலையில் இவர் கட்டுப்பாட்டை இழந்து விட்டார். வாகனம் இவரை அறியாமலேயே பாதை மாறி விட்டது. முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மோதியது. முச்சக்கர வண்டி தூக்கி எறியப்பட்டது.

தொடர்ந்து மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீதும் வாகனம் மோதியது. அடுத்து வீடு ஒன்றின் மதில் சுவரை உடைத்துச் சென்று தரித்து நின்றது. இத்திடீர் விபத்தால் பாணந்துறை பிரதான வீதியில் பெரிய பரபரப்பே ஏற்பட்டு விட்டது.

முச்சக்கர வண்டிக்குள் பயணித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயப்பட்டனர். பொலிஸார் விரைந்து வந்தனர். பொறியியலாளரை கைது செய்தனர்.

இருப்பினும் மட்டைத் தேள்தான் இவ்வளவு விபரீதத்துக்கும் காரணம் என்று பொலிஸாருக்கு விளங்கப்படுத்தினார் பொறியியலாளர். மட்டைத் தேளை பொலிஸார் தேடினர். வாகனத்தின் இறப்பர் கம்பளத்துக்கு அடியில் மட்டைத் தேள் காணப்பட்டது. பிடித்து அப்புறப்படுத்தினார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top