புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மலேசியாவில் தான் பணிபுரிந்த வீட்டில் பெறுமதிமிக்க நகைகளை திருடிக்கொண்டு  நாடு திரும்பிய இலங்கைப் பணிப்பெண் ஒருவர் நேற்று கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஏ.கே.1267 என்ற விமானத்தில் பயணித்த இலங்கை பணிப்பெண் ஒருவரே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவில் தான் பணிபுரிந்த வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் ஒன்றில் தொடர்புடைய குற்றச்சாட்டிலேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான பெண் 32 வயதுடைய கேகாலைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் பணிபுரிந்த வீட்டு உரிமையாளர் கொள்ளைச் சம்பவம் குறித்து மலேசிய தூதரகத்திற்கு அறிவித்ததன்படி அப்பெண்ணை மலேசியாவிற்கு அனுப்பிய குருநாகல் பிரதேச வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

இதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்த குறித்த பணிப்பெண் கட்டுநாயக்க விமானநிலைய பொலிஸ் அதிகாரிகளிடம் வகையாக மாட்டிக்கொண்டார்.

அத்துடன் அவரிடம் இருந்து 24 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top