புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


லண்டனில் பரபரப்பான கடைத் தெருவில் 15 வயது இளம் பெண், சக தோழியை சீப்பால் கத்திக் கொலை செய்தார்.மத்திய லண்டனில் உள்ள பிம்லிகோ பகுதியைச் சேர்ந்தவர் ரெபேக்கா டோக்லாஸ்(வயது 15). கிழக்கு லண்டனில் உள்ள ஹாக்னி பகுதியை சேர்ந்தவர் ராவுப்பின் மகள் ஜூலி.


இவர்கள் கடந்த 2006ஆம் ஆண்டு மேற்கு ஆப்ரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தனர்.

கடந்தாண்டு மே 7ஆம் தேதி தெற்கு லண்டனில் பாட்டர்சீ பகுதியில் உள்ள பால்கன் சாலையில் ஒரு கடை முன்பு நின்றிருந்த ஜூலியுடன், ரெபேக்கா டோக்லாசும் ஆவேசமாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்ற ரெபேக்கா, தன் தலையில் சொருகியிருந்த உலோக சீப்பை எடுத்து கைப்பிடி பகுதியில் இருந்த இரும்புக்கம்பியால் ஜூலியின் தலையில் சரமாரியாக குத்தினார்.

இதில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த ஜூலிக்கு ரத்தம் தொடர்ந்து வெளியேறியது. இதனால் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஜூலியை சீப்பால் குத்துவதற்கு முன்பாக தனது பிளாக்பெரி போனையும், பையையும் அருகில் உள்ள தனது நண்பரிடம் கொடுத்துள்ளார் ரெபேக்கா டோக்லாஸ். பின்னர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் வீட்டில் இருந்த அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். ரெபேக்கா டோக்லாஸ் ஆண்களுடன் தொடர்பு வைத்துள்ளதாக ஜூலி அவதூறு பரப்பியதாகவும், அதனால் ஆத்திரம் அடைந்த ரெபேக்கா ஜூலியை கொலை செய்ததும் தெரியவந்தது.

டோக்லாஸ் சீப்பின் உலோக பகுதியால் குத்தியதில் ஜூலியின் மண்டை ஓடு வரை துளைக்கப்பட்டிருந்தது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.

இதற்கிடையில் கோமா நிலையிலேயே இருந்த ஜூலி, நினைவு திரும்பாமலேயே கடந்த செப்டம்பரில் உயிரிழந்தார். இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்திய பொலிசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். லண்டனில் உள்ள தி ஓல்டு பெய்லி நீதிமன்றத்தில் நீதிபதி நிக்கோலஸ் குக் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.

கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட சீப்பும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளார்.

நீதிபதி தனது தீர்ப்பில், ஜூலி கொலை வழக்கில் உலோக பிடியுள்ள சீப்பு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் அழகு சாதன பொருட்களும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள், ஆபத்தில்லாத அழகுப் பொருட்களை உபயோகிக்கிறார்களா என்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும் என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top