புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலம் பர்லிங்டன் டவுன்ஷிப் பகுதியில் வசிப்பவள் மிராண்டா பவ்மேன் வயது 12. இவள் தன்னுடைய தாத்தா பால் பார்க்கருடன் (63), நியூ ஜெர்சி மோட்டார் ஸ்போர்ட்ஸ் பார்க்கில் நடந்த போட்டியை காண
சென்றாள்.

நிகழ்ச்சி முடிந்தவுடன் காரில் இருவரும் வீட்டுக்கு கிளம்பியுள்ளனர். அப்போது பேத்தியிடம், எனக்கு உடல்நலம் சரியில்லை, பயமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். எனினும் காரை ஓட்டி சென்றார் பால் பார்க்கர், 80 கி.மீ. வேகத்தில் கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது தாத்தாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு ஸ்டியரிங்கில் சாய்ந்துவிட்டார். ஆக்சிலேட்டரில் அவருடைய கால் இருந்ததால் கார் கட்டுப்பாடில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. அருகில் அமர்ந்திருந்த மிராண்டா பயத்தில் அலறியவாறு துணிச்சலாக ஸ்டியரிங்கை கையில் பிடித்துக் கொண்டு பிரேக் மீது கால் வைத்து அழுத்தினாள்.

கார் தாறுமாறாக பாய்ந்து புதருக்குள் ஓடி நின்றது. அதிர்ஷ்டவசமாக மிராண்டா உயிர் தப்பினாள். ஆனால் முதியவர் மரணமடைந்துவிட்டார். இதுகுறித்து பால் பார்க்கரின் உறவினர்கள் கூறுகையில், அவருக்கு ஏற்கனவே இதய கோளாறு இருந்தது. மாரடைப்பால் அவர் இறந்துள்ளார் என்றனர்.

80 கி.மீ. வேகத்தில் சென்ற காரை துணிச்சலாக நிறுத்தி உயிர் தப்பிய மிராண்டா பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top