புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தூர்: மத்திய பிரதேசத்தில் 19 வயது பெண்ணின் வயிற்றில் இருந்த 1.8 கிலோ தலைமுடி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ராஜ்காரைச் சேர்ந்தவர் 19 வயது ராணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவருக்கு தனது தலைமுடி
மற்றும் வகுப்பறையில் உள்ள சாக்பீஸை உண்ணும் பழக்கம் உள்ளது. இப்படி தலைமுடியையும், சாக்பீஸ்களையும் சாப்பிட்டு வந்த அவருக்கு குடல் அடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் கடந்த 2 நாட்களாக சாப்பிடவும் இல்லை, தண்ணீரும் குடிக்கவில்லை. உடனே அவரை இந்தூரில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்ததில் அவரது வயிற்றில் தலைமுடியும், சாக்ஸ்பீஸ்களும் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று அவருக்கு டாக்டர் பர்விந்தர் சிங் லுபானா தலைமையிலான மருத்துவர்கள் குழு அறுவை சிகிச்சை செய்து அவற்றை அகற்றியது.

அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட முடியின் எடை 1.8 கிலோ ஆகும். இளம் பெண் வயிற்றில் இருந்து தலைமுடியும், சாக்ஸ் பீஸ்களும் அகற்றப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top