
இவர் இம்முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.
இவர் கணவனுக்கு இரண்டு குழந்தைகள் போதும் என்ற எண்ணம் இருந்தது. குடும்பக் கட்டுப்பாடு முறைகள் குறித்து இவர்களிருவரும் சிந்திக்கவேயில்லை.
இந்தப் பெண் கருவுற்று குழந்தை பெற்றதும், கொன்று பிணத்தை மறைத்ததும் இவர் கணவனுக்குக் கூடத் தெரியாது.
ஐந்து குழந்தைகளையும் யாருடைய உதவியுமின்றி யாருக்குத் தெரியாமல் தானாகவே பெற்று தனியாகவே கொன்றுள்ளார். இரண்டு குழந்தைகளை வீட்டிலும் மூன்று குழந்தைகளையும் காட்டிலும் பெற்றுள்ளார்.
பொலிசாரிடம் இப்பெண் தான் வளர்க்க வழியின்றி ஐந்து குழந்தைகளையும் கொன்று போட்டதாகக் கூறி நடந்தவற்றை விவரித்தார்.
இரண்டு குழந்தைகளை 2006 மற்றும் 2007ல் கொன்றார். ஒரு குழந்தையின் உடல் வீட்டினருகே உள்ள காகித மறுசுழற்சி மையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
மற்ற மூன்று குழந்தைகளையும் கொன்று வீட்டின் பாதாள அறையில் அட்டைப் பெட்டிக்குள் திணித்து வைத்துவிட்டார். அந்த உடல்கள் அழுகி நாறிவிட்டன.
எனவே இறந்த நேரத்தைக் கணக்கிட முடியவில்லை இறந்த முறை மட்டும் அறியப்பட்டது. அனைத்து குழந்தைகளும் அவருடையவை என்பது மரபணு பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது.
0 கருத்து:
கருத்துரையிடுக