புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நிறைய மக்களுக்கு எதற்கு கூந்தலில் மட்டும் அதிகப்படியான எண்ணெய் பசை இருக்கிறது என்று தெரியவில்லை. அதற்காக என்னென்னவோ செய்து பார்ப்பார்கள். இருப்பினும் அந்த எண்ணெய் பசை இருக்கிறது. ஆகவே முதலில் அதனை போக்குவதை விட, எதற்கு ஏற்படுகிறது என்ற காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு
தெரிந்து கொண்டு, பின்னர் அந்த எண்ணெய் பசை போக்குவதற்கான செயல்களை செய்தால், ஒரு பலன் இருக்கிறது. ஆகவே இப்போது கூந்தல் எண்ணெய் பசையாக இருப்பதற்கான காரணங்களைப் பார்ப்போமா!!!

* கூந்தல் எண்ணெய் பசையோடு இருப்பதற்கான முதல் காரணம், உடலில் இருக்கும் எண்ணெய் சுரப்பியில் அளவுக்கு அதிகமான அளவில் எண்ணெய் சுரப்பதே ஆகும். அந்த பொருளுக்கு செபம் என்று பெயர். எண்ணெய் சுரப்பில் அந்த செபம் என்னும் பொருள் அதிகமாக சுரப்பதால், ஸ்கால்ப் மற்றும் கூந்தல் அதிகமாக எண்ணெய் பசையோடு காணப்படுகின்றன. இதனை உடனே முழுவதும் சரிசெய்துவிட முடியாது. ஆகவே அத்தகையவர்கள், ஒரு நாள் விட்டு ஒரு நாள் கூந்தலுக்கு ஷாம்பு போட்டு குளிக்கலாம்.

* நிறைய பேர் எதற்கெடுத்தாலும் கூந்தலை அடிக்கடி நீவிக் கொண்டே இருப்பார்கள். அவ்வாறு செய்வதால், கூந்தலுக்கு நிறைய பிரச்சனைகளான கூந்தல் உதிர்தல், எண்ணெய் பசையான கூந்தல் போன்றவை ஏற்படுகின்றன. ஏனெனில் எண்ணெய் பசையுள்ள பொருட்கள் மற்றும் இதர பொருட்களில் கையை வைத்துவிட்டு, நேரடியாக மறுநிமிடம் அந்த கைகள் கூந்தலுக்கு தான் செல்லும். ஆகவே எப்போதும் அடிக்கடி கைகளை கூந்தலில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

* உணவும் மற்றொரு காரணம். ஏனெனில் அதிக அளவில் எண்ணெய் பசையுள்ள உணவுகளை உண்பதால், அதில் உள்ள எண்ணெய் உடலில் சென்று அதிக அளவில் எண்ணெயை வெளிப்படுத்துகிறது. அதிலும் இத்தகைய எண்ணெய் கூந்தலில் மட்டும் வெளிவராமல், உடல் முழுவதுமே வெளிவருகிறது. ஆகவே எந்த உணவை உண்டாலும் அளவோடு உண்ண வேண்டும்.

* அடிக்கடி வெளியே செல்ல வேண்டிய நிலைமை இருக்கிறது. ஆகவே வெளியே இருக்கும் மாசடைந்த சுற்றுச்சூழலால், கூந்தலில் அழுக்குகள் புகுந்து, தலையில் படிந்துவிடுகின்றன. இதனால் தலையை மற்றும் கூந்தலைப் பார்த்தால், எண்ணெய் பசையோடு இருக்கும். எனவே கூந்தலுக்கு ஷாம்பு போட்டு, தினமும் அல்லது ஒரு நாள் விட்டு குளித்து வந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

* வண்டிகளை ஓட்டும் போது, அதில் இருந்து வரும் புகையில் ஒரு குறிப்பிட்ட அளவில் எண்ணெய் பொருள் உள்ளது. ஆகவே அது கூந்தலில் படுவதால், கூந்தல் வறண்டு, அதிக எண்ணெய் பசையுடன் காணப்படுகிறது. ஆகவே அவ்வாறு செல்பவர்கள், தலையில் ஏதேனும் ஒரு துணியைக் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும். மேலும் தினமும் ஹெர்பல் ஷாம்புவை போட்டு குளிக்க வேண்டும். எனவே அந்த எண்ணெய் பசையை ஈஸியாக தடுக்கலாம்.

  • கூந்தல் எண்ணெய் பசையாக இருந்தால், நிறைய பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே, அதற்கு கூந்தலுக்கு செயற்கை முறையில் தயாரித்த கெமிக்கல்கள் கலந்த பொருட்களைப் பயன்படுத்தி பராமரிப்பதை விட, இயற்கை முறையில் இருக்கும் ஒரு சில பொருட்களை பயன்படுத்துவதே சிறந்தது. அதிலும் எண்ணெய் பசை கூந்தலுக்கு கூந்தல் உதிர்தல் மற்றும் பொடுகு போன்றவை அதிகம் ஏற்படும். ஏனெனில் அதிக எண்ணெய் பசையுடன் இருப்பதால், அழுக்குகள் அதிகம் படிந்து தங்கிவிடும். ஆகவே அப்போது அழகு நிலையங்களுக்குச் சென்று பராமரிப்பதை விட, இயற்கை முறையில் வீட்டிலேயே ஹேர் பேக் சிகிச்சையை அளிக்கலாம். அதிலும் அந்த ஹேர் பேக்களை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்தால், சிறப்பான ஒரு பலனை அடையலாம்.
  • ஹென்னா - எண்ணெய் பசையான கூந்தலுக்கு ஹென்னா ஒரு சிறப்பான பொருள். அதற்கு இரவில் படுக்கும் முன், 3 டேபிள் ஸ்பூன் ஹென்னா மற்றும் 2 டேபிள் ஸ்பூன் டீயை ஊற்றி, ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்து, அதனை கூந்தலுக்கு தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் கூந்தலில் இருக்கும் எண்ணெய் பசையை நீக்குவதோடு, கூந்தல் உதிர்தலும் நீங்கும்.
  • கார்ன் ஃப்ளார் - கார்ன் ஃப்ளாரை வைத்து செய்யப்படும் ஹேர் பேக்கில், கார்ன் ஃப்ளார், 1 டேபிள் ஸ்பூன் சுடு தண்ணீர் மற்றும் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, கூந்தலுக்கு தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை நீரில் அலச வேண்டும். பின்னர் பாருங்கள், கூந்தல் சரியான அளவு எண்ணெயோடு அழகாக காட்சியளிக்கும்.
  • பூந்திக்கொட்டை - பூந்திக் கொட்டை எண்ணெய் பசை கூந்தலுக்கு மிகவும் சிறந்தது. இதனை கூந்தலுக்கு பயன்படுத்தினால், அதிகப்படியான எண்ணெய் மற்றும அழுக்குகள் முழுமையாக குறைந்துவிடும். இது ஒரு சிறந்த முறை. அதற்கு 2 டேபிள் ஸ்ழுன் பூந்திக் கொட்டை பவுடருடன், சிறிது தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாற்றை விட்டு, கலந்து கூந்தலுக்கு தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். மேலும் இந்த முறையால் கூந்தல் நன்கு ஆரோக்கியமாக இருப்பதோடு, பொடுகுத் தொல்லையும் நீங்கும்.
  • முட்டை வெள்ளை கரு - முட்டையின் வெள்ளைக் கருவுடன், 1-2 டீஸ்பூன் புதினா சாற்றை விட்டு, கூந்தலுக்கு தடவி, அரை மணிநேரம் ஊற வைத்து, பின்னர் தவறாமல், கூந்தலுக்கு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இல்லையெனில் கூந்தலில் நாற்றம் ஏற்படும். அதனால் கூந்தலில் எண்ணெய் பசை நீங்கி, மென்மையோடும், பொலிவோடும் காணப்படும்.
  • மேற்கூறிய அனைத்தும் கூந்தலுக்கு ஏற்ற சிறந்த ஹேர் பேக்ஸ். இவற்றை பயன்படுத்துவதால் கூந்தலுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. முக்கியமாக கூந்தல் விரைவில் மென்மையாக, பட்டு போல் ஆக வேண்டும் என்பதற்காக அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்தால், பின் கூந்தல் வறட்சியடைந்துவிடும்.

ஆகவே மேற்கூறியவாறெல்லாம் கூந்தலை பராமரித்து வந்தால், கூந்தல் நன்கு பொலிவோடு இருக்கும். மேலும் வாரத்திற்கு ஒரு முறை ஏதேனும் ஹேர் பேக்கை போட்டாலும், கூந்தல் பட்டுப் போன்று இருக்கும்.



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top