புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மாலைத்தீவில் வாலிபருடன் தவறான உறவு வைத்துக் கொண்ட 16 வயது பெண்ணுக்கு 100 கசையடி வழங்கவும், 8 மாதம் வீட்டு காவலில் வைக்கவும் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.மாலைத்தீவின் தலைநகர் மாலேவில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள ரா அடோல் என்ற பகுதியில் 16 வயது பெண்ணும், 29 வயது வாலிபரும் உறவு வைத்துக் கொண்டனர்.இதை அறிந்த பெண்ணின் குடும்பத்தினர், பொலிசில் புகார் தெரிவிக்கவே இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்த போது உறவு வைத்துக் கொண்டதை பெண் ஒப்புக் கொண்டார். இதையடுத்து திருமணத்துக்கு முன்பு இவ்வாறு செய்த குற்றத்துக்காக சிறுமிக்கு 100 கசையடி வழங்கவும், 8 மாதம் வீட்டுக் காவலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் அந்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 16 வயதாவதால், அவளுக்கு 18 வயதானவுடன் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கிடையில் பொது இடத்தில் பெண்களுக்கு கசையடி கொடுக்கும் தண்டனையை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் தலைவர் நவிபிள்ளை மாலைத்தீவு அரசை வலியுறுத்தி வருகிறார்.

மாலைத்தீவில் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கசையடி வழங்க கிராமத் தலைவர்களே உத்தரவிடுவது வழக்கம். அவர்களே நீதிபதிகள் போல செயல்படுகின்றனர்.பொதுமக்கள் முன்னிலையில் மூங்கில் பிரம்பால் அடித்து குற்றம் நிறைவேற்றப்படுகிறது. இதற்கு பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top