
அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் டேவிட் ஜான்சன் என்பவர் இவரது வீட்டுக்கு வந்தார்.
வீட்டுக்குள் நுழைந்த ஜான்சன் தனது பெல்டால், ரோஸின் கழுத்தை இறுக்கினார். பின்னர் அவரை கத்தியால் சரமாரியாக குத்தினார்.
மொத்தம் 38 கத்திக்குத்து விழுந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட ரோசுக்கு 70 தையல் போடப்பட்டது.
விசாரணையில், தனது வீட்டில் திருடியது ரோஸ் என்று நினைத்து கோபத்தில் அவ்வாறு நடந்து கொண்டதாக ஜான்சன் தெரிவித்தார்.
உயிர் பிழைத்த ரோஸ் கூறுகையில், பெல்டால் கழுத்தை நெறித்த உடனேயே நான் மயங்கி விட்டேன். பொலிஸ் எடுத்த புகைப்படங்களை பார்த்தால் நான் பிழைத்ததை என்னாலேயே நம்ப முடியவில்லை.
நான் குண்டாக இருந்ததால் தான் பிழைக்க முடிந்தது. ஒல்லியாக இருந்திருந்தால் இறந்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக