புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நடிகை சோனா ஒரு வாரப்பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஆண்கள் டிஷ்யூ பேப்பர் போன்றவர்கள் என்பது போன்று கூறியிருந்தார்.
அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.


அவரது வீடு முன்பு முற்றுகை போராட்டமும் நடத்தினார்கள். அப்போது நடிகை சோனா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

ஆனால் சோனா, தான் அவ்வாறு கருத்து தெரிவிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் ஆண்கள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் மதுசூதனன் சார்பில் சட்டத்திரனி அருந்துமிலன் சென்னை எழும்பூர் 13வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பாதாவது, நடிகை சோனா ஆண்களைப் பற்றி தெரிவித்துள்ள கருத்து அவதூறானது.

ஆண்களின் சுயமரியாதைக்கு எதிரானது. பண்பாடு மிக்க சமுதாயத்தை சீரழிக்கும் வகையில் பேசி உள்ளார். குடும்ப வாழ்க்கையை பற்றியும் கொச்சைப்படுத்தி இருக்கிறார்.

சுயமரியாதைக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் நடிகை சோனா மீது சட்டப்பிரிவுகள் 500, 504, 505 ஆகியவற்றின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top