புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இத்தாலியில் ஒன்றரை வயது மகனை பாலத்தில் இருந்து ஆற்றில் வீசியெறிந்த தந்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இத்தாலியின் தலைநகர் ரோமைச் சேர்ந்தவர் பாட்ரிசோ பிரான்சிஸ்செல்லி(வயது 29). இவரது மனைவி ஜெர்மானோபோலினி, இவர்களது ஒன்றரை வயது மகன் கிளாவுடியோ.


மதுவுக்கு அடிமையான பிரான்சிஸ்செல்லி மீது போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் வழக்கு ஒன்றில் சிறைத்தண்டனை பெற்றதால், சிறையில் அடைக்க பொலிசார் அழைத்து சென்றனர்.

அப்போது மனைவி மகனுடன் வந்திருந்தார். திடீரென மகனை பறித்துக் கொண்டு ஓடிய பிரான்சிஸ்செல்லி, அங்கிருந்த திபெர் ஆற்றின் பாலத்தில் இருந்து மகனை வீசி எறிந்தான்.

இதனையடுத்து தப்பி ஓட முயன்றவரை, பொலிசார் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ரோம் நீதிமன்றத்தில் நடந்தது.

அப்போது பிரான்சிஸ்செல்லிக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top