புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சவுதி அரேபியாவில் பெருந் தொகையை வரதட்சணையாக கொடுத்து, 15 வயது சிறுமியை 90 வயது முதியவர் திருமணம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.சவுதி அரேபியாவை சேர்ந்தவர் பென் அலி மஷ்ரகி(வயது 90). இவர் சமீபத்தில் 15 வயது
மதிக்கத்தக்க சிறுமி சரிபா அலியை திருமணம் செய்து கொண்டார்.

இத்திருமணத்திற்கு மனித உரிமை ஆர்வலர்களும், பெண்கள் நல அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

ஆனால் திருமணம் சட்டப்பூர்வமான ஒன்று என்றும், சிறுமியை மணப்பதற்காக 17,500 டொலர் பணத்தை குறித்த சிறுமியின் பெற்றோருக்கு கொடுத்ததாகவும் பென் அலி தெரிவித்திருந்தார். மறுபடியும் என் மனைவியை கொண்டு வந்து விடுங்கள் என்றும் வற்புறுத்தி வந்தார்.

இந்நிலையில் தன் குடும்பத்திற்காகவே முதியவரை திருமணம் செய்து கொண்டதாக சரிபா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இவர் கூறுகையில், நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர், என்னுடன் பிறந்தவர்கள் 12 பேர்.

சொந்த வீடில்லாமல், குடிசையில் வசித்து வருகிறோம். குளிர் காலங்களிலும், மழை காலங்களிலும் மிகுந்த சிரமத்தை சந்திப்போம்.

எனவே தான் பெரும் தொகையை பெற்றுக்கொண்டு குடும்பத்திற்காக முதியவரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தேன் என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top