புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜூன் மாதம் முதல் அமெரிக்க விமான நிலையங்களில் நிர்வாண பரிசோதனைக்கு தடை விதிக்கப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களை கருதி அமெரிக்காவில் உள்ள விமான நிலையங்களில் அதிநவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய ஸ்கேன்
எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

விமான பயணிகளை நிர்வாண பரிசோதனை செய்து வெடி பொருட்களை மறைத்து எடுத்து செல்கின்றனரா? என்பதை தெரிவிக்கின்றன. இது பயணிகளுக்கு பல வழிகளில் அசவுகரியத்தை ஏற்படுத்தியது. இதனால் அதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது.

எனவே இந்த முறையை மாற்றியமைக்க அமெரிக்கா அரசு முடிவு செய்தது. அதையடுத்து அந்த ஸ்கேன் எந்திரத்தில் பரிசோதிக்கப்படுபவரின் நிர்வாண உருவம் பதிவாகாத வகையில் கம்ப்யூட்டர் மென்பொருளை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து வருகிற ஜூன் மாதம் முதல் அமெரிக்க விமான நிலயங்களில் நிர்வாண பரிசோதனை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top