புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பாரீஸ் நகர பெண்கள் கால்சட்டை அணிவதற்கு தடை விதிக்கும் சட்டம் 200 ஆண்டுகளுக்கு பின் தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 1800ம் ஆண்டு பாரீஸ் நகர பெண்கள், ஆண்கள் அணியும் கால்சட்டை அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

ஆனால் பெண்கள் கால்சட்டை அணிய விரும்பினால் நகர பொலிசாரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த 1892 மற்றும் 1909ம் ஆண்டுகளில் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டபோதும் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவில்லை.

பாரீஸ் நகர பெண்கள், இந்த சட்டத்துக்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தநிலையில் 200 ஆண்டுகளுக்கு பின் ஒருவழியாக இந்த சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை பிரான்சின் பெண்கள் உரிமை துறை அமைச்சர் நஜாத் வல்லாட் பெல்காசெம் தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top