புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஏ‌ற்கனவே ‌திருமணமா‌கி க‌ள்ள‌க்காதலனுட‌ன் ஓடி வ‌ந்த 36 வயதுடைய பெ‌ண், பா‌லிடெ‌க்‌னி‌‌க் மாணவனை காத‌‌ல் ‌வலை‌யி‌ல் ‌விழவை‌த்து அ‌ந்த மாணவனுட‌ன் ஓடி‌வி‌ட்டா‌ர். இ‌ந்த ச‌ம்பவ‌ம்
நெ‌ல்லை மாவ‌ட்‌ட‌ம் தெ‌ன்கா‌சி‌யி‌ல் அர‌‌ங்கே‌றியு‌ள்ளது.

நெல்லை மாவட்டம் தென்காசி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் சாரதியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி லதா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மூத்த மகன் மணிகண்டன் (19). இவர் தென்காசியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர்களது பக்கத்து வீட்டில் ஒரு தம்பதி வாடகைக்கு குடியேறினார்கள். குடியேறிய சில தினங்களிலேயே அந்த வீட்டுக்கு வந்த பெண் தன் பெயர் தனலட்சுமி என்ற மலர்விழி (36) என்று லதாவிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார்.

மேலும் அவர் தனக்கு தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி சொந்த ஊர் என்றும். தன்னுடைய கணவர் பெயர் சிலேந்திரன் (28) என்றும் கூறினார். தனது மாமனார் காளையாதேவர் ஊரில் முக்கிய புள்ளி என்றும் கூறினார். குடும்ப விஷயங்களை பற்றி அடிக்கடி லதாவிடம் கூறிய மலர்விழி, அவரது குடும்பத்தினருடன் நெருங்கி பழகினார். லதாவின் பிள்ளைகளிடமும் பாசமாக இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 9.11.2012 அன்று இரவு வீட்டைவிட்டு வெளியே சென்ற மணிகண்டன், அதன் பின்னர் வீட்டுக்கு வரவில்லை. வெகுநேரமாகியும் மகன் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியன், உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் மகனை தேடி பார்த்தார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பொலிஸில் புகார் செய்ய சுப்பிரமணியன் முடிவு செய்தார்.

இதற்கிடையே மணிகண்டன் காணாமல் போன மறுநாள் மலர்விழியும், சிலேந்திரனும் வீட்டை காலி செய்துவிட்டு சென்றனர். இது சுப்பிரமணியனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து சுப்பிரமணியனும், லதாவும், மலர்விழியை தேடி தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டிக்கு சென்றனர். அங்கு அவர் கூறிய முகவரிவை தேடிப்பிடித்து சிலேந்திரனை சந்தித்து தனது மகன் மாயமானது குறித்து விவரம் கேட்டனர். அப்போது அவர் கூறிய தகவலை கேட்ட அவர்கள் இருவருக்கும் தலை சுற்றியது.

த‌‌ன்‌னிட‌ம் இரு‌ந்து மல‌ர்‌வி‌ழி எ‌‌ப்படி ஓடி‌ச்செ‌ன்றா‌ல் எ‌ன்பது கு‌றி‌த்து சிலேந்திரன் கூறுகை‌யி‌ல், தென்காசியில் என்னுடன் இருந்த பெண் என் மனைவி இல்லை. அவள் வேறு ஒருவரின் மனைவி. அவளுக்கு ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு விட்டு தான் அவள் என்னுடன் வந்தாள்.

சொந்த ஊரில் நாங்கள் வாழமுடியாது என்பதால், தென்காசி வந்தோம். அங்கு வாடகைக்கு வீடு கிடைப்பதற்காக நாங்கள் கணவன், மனைவி என்று கூறினோம். எனக்கு தற்போது வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் ஆகிவிட்டது.

தென்காசியில் தங்கி இருந்தபோது உங்கள் மகனுடன் அவளுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி பேசிக்கொள்வார்கள். எனவே மலர்விழி என்னை விட்டு விட்டு உங்கள் மகன் மணிகண்டனுடன் சென்று விட்டாள் எ‌ன்று சிலேந்திரன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

பாசமாக பழகி மோசம் செய்துவிட்டாளே என்று அழுது புலம்பிய லதா, தனது மகனை கண்டுபிடித்து கொடுக்கும்படி தென்காசி பொலிஸில் புகார் செய்தார். லதா கொடுத்த புகாரின் பேரில் தென்காசி சிறப்பு பொலிஸார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனையும், தனலட்சுமி என்ற மலர்விழியையும் தேடி வருகி‌ன்றன‌ர். 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top