புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ம் திகதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் காதலர்கள் எல்லை மீறி செல்வதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் நாய்களுக்கு
திருமணம் செய்து வைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

புளந்தோப்பு குட்டி தம்பிரான் தெரு காந்தி சிலை அருகில் இந்து முன்னணி மாநகர பொது செயலாளர் எஸ்.எஸ். முருகேசன் தலைமையில் இந்து முன்னணி தொண்டர்கள் இரு நாய்களை அலங்கரித்து மாலை அணிவித்து மணமகன், மணப்பெண் வேடத்தில் அழைத்து வந்தனர்.

அவற்றுக்கு பொது மக்கள் முன்னிலையில் மஞ்சள் கயிறு தாலி கட்டினார்கள். பின்னர் வீதி வீதியாக ஊர்வலமாக அழைத்து சென்றனர்.  அத்துடன் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காதலர்களுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.


இந்நிகழ்ச்சி நடத்தியது குறித்து இந்து முன்னணி மாநகர பொதுச் செயலாளர் முருகேசன் கூறியதாவது:-  காதலுக்கு நாங்கள் எதிரி அல்ல. காதல் என்ற பெயரில் ஆண்-பெண்கள் தவறாக நடக்கிறார்கள். காதல் புனிதம் கெட்டு விட்டது. காதலர்கள் பீச், பூங்காக்களில் தெரு நாய்கள் போல் நடந்து கொள்கிறார்கள். அவர்களின் செயல்கள் பொது மக்களை முகம் சுளிக்க வைக்கிறது. காதல்களின் செயல்களால் தான் பாலியல் வன்முறை பெருகி வருகிறது.
பெண்களை காம கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். காதலர் தினத்தில் காதலர்களை சேர்த்து வைத்து திருமணம் செய்து வைக்க வலிறுத்தி ஆண்-பெண் நாய்களுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளோம். இந்த நிகழ்ச்சியால் காதலர்கள் திருந்துவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதேவேளை கொருக்கு பேட்டையில் காதலர் தினத்தை கண்டித்து இந்து முன்னணி மாநகர தலைவர் டி.மனோகர் தலைமையில் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top