புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


விஸ்வரூபம் திரைப்படம் வெளியாவதில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், படம் வரும் 7ம் திகதி வெளியாகும் என்று தெரிகிறது.

திரைப்படம் குறித்த முத்தரப்பு பேச்சில் உடன்பாடு ஏற்பட்டு 7 காட்சிகளை நீக்க கமல் ஒப்புக்கொண்டதை அடுத்து கலெக்டர்கள் விதித்த 144 தடையும் நீக்கப்பட்டது.

விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக கூறி அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

கடந்த மாதம் 25ம் திகதி ரிலீஸ் ஆக வேண்டிய படத்துக்கு தமிழக அரசு 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு விதித்தது.

இதற்கு எதிராக கமல் வழக்குத் தொடர்ந்தார். தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டாலும் தமிழக அரசு செய்த அப்பீலில் 2 நீதிபதிகள் மீண்டும் தடை விதித்தனர்.

இந்நிலையில் முஸ்லிம் அமைப்புகளுடன் கமல் பேசி சமரசம் செய்தால் படத்தை வெளியிட அரசு உதவும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதன்படி நேற்றுமுன்தினம் பேச்சுவார்த்தை நடந்தது. படத்தில் இடம்பெறும் ஆட்சேபகரமான 7 காட்சிகளை நீக்க கமல் சம்மதித்ததால் பிரச்னை முடிவுக்கு வந்தது. சில காட்சிகளில் ஒலியை மட்டும் அகற்ற ஒப்புக் கொண்டார்.

உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, கமல் தொடர்ந்த வழக்கு இன்று திரும்ப பெறப்படுகிறது. முஸ்லிம் அமைப்பினரும் தங்கள் வழக்குகளை திரும்ப பெறுகிறார்கள்.

இந்நிலையில் படத்துக்கு கலெக்டர்கள் பிறப்பித்த தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளதையடுத்து 524 திரையரங்குகளில் விஸ்வரூபம் படம் வரும் 7ம் திகதி வெளியாகும் என்று தெரிகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top