புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்கப் பாடகியான பியோன்சே அணியும் ஷு, உயிரினங்களின் தோல்களை பயன்படுத்தி செய்யப்பட்டுள்ளமையால் தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

குறித்த இந்த ஷு திருக்கை, அனகொண்டா, தீக்கோழி, முதலை மற்றும் கன்றுக்குட்டி ஆகிய 5 உயிரினங்களின் தோலைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்ற தகவல் வெளியானது.

இந்த ஷுவை தயாரிப்பதற்கு பல உயிரினங்கள் கொடுமைப்படுத்தப்படுவதுடன், கொல்லவும் படுவதாக சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பி.எம்.கே என்ற நிறுவனமே இந்த ஷுவினை தயாரித்துள்ளதாகவும் இது பியோன்சேயின் விசேட தெரிவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த ஷுவினை அவரது அனுமதியின்றி தயாரித்திருக்கமுடியாது என விலங்குகளை காக்கும் அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

இதேபோல் அவரது கணவரான ஜேசேவுக்கென இதே நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ' புரூக்லின் ஷு'வும் இதே போன்று பல விலங்குகளின் தோல்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top