புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆசை ஆசையாக வளர்த்த நாயை கண்டுபிடித்து கொடுத்தால் ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என, வங்கி அதிகாரி ஒருவர் துண்டு பிரசுரங்களை வெளியிட்டுள்ளார்.


சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் சந்திரமவுலி. வங்கி அதிகாரி. இவர் மிகவும் பாசமாக, “சிவா’ என்ற நாயை வளர்த்து வந்தார். அலுவலகம் செல்லும் போதும், நாயை கூடவே அழைத்து செல்வார்.

அப்படி என்ன பாசம்? கடந்த மார்ச் 4ம் தேதியன்று வழக்கம் போல் நாயை, தனது அலுவலத்திற்கு அழைத்து வந்தார். அன்று மதியம், 2:30 மணிக்கு திடீரென நாயை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், மிகவும் துவண்டு போனார் சந்திரமவுலி. “என் சிவாவை கண்டுபிடித்து கொடுத்தால், 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும்’ என, துண்டு பிரசுரங்களை அச்சடித்து, சென்னை முழுவதும் வினியோகித்து வருகிறார்.

“சிவா மீது அப்படி என்ன பாசம்?’ என்ற கேள்விக்கு சந்திரமவுலி கூறியதாவது: இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் காலை நேரத்தில் தான் சிவாவை சந்தித்தேன். அப்போது அவன் உடம்பெல்லாம் காயமாக இருந்தது. கல்லடி பட்டு ரத்தம் சிந்தியது. அவனை வீட்டிற்கு அழைத்து சென்று, காயங்களுக்கு மருந்து போட்டேன். ஸ்பெஷல் சோப் வாங்கி போட்டு குளிப்பாட்டியதும், பளிச்சென மாறிவிட்டான். ரேஷன் கார்டில் சேராத, குடும்ப உறுப்பினராக இருந்தான். நான் எப்போதும் சிவநாமத்தையே உச்சரிப்பேன். அதன்படி, “சிவா’ என, பெயரிட்டேன். என், மகன் போல அவனை பாவித்தேன். நான் வங்கி செல்லும் முன், எனக்கு முன்பாக காரில் ஏறி கொள்வான். இருவரும் சேர்ந்தே வங்கி செல்வோம்.

எப்படி இருக்கிறானோ? மதிய உணவுக்கு பின் “வாக்கிங்’ செல்வோம். இந்த நிலையில், யார் கண் பட்டதோ, மார்ச் 4ம் தேதி, நான் வங்கியில் இருந்து திரும்பும் போது, சென்னை அருங்காட்சியகம் அருகே நண்பரை பார்க்க போனேன். திரும்பி வருவதற்குள் காணாமல் போய் விட்டான். ஒரு மாதமாக தேடியும் கிடைக்கவில்லை. எப்படி இருக்கிறான், சாப்பிட்டானா, பசியோடு திரிகிறானா என்றும் தெரியவில்லை. குடும்பத்தில் ஒருவரை பிரிந்தது போல, என் மனம் வலிக்கிறது. எனவேதான், 1 லட்ச ரூபாய் பரிசு அறிவித்துள்ளேன். யார் மூலமாவது சிவா எனக்கு கிடைப்பான் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு, சிவா பற்றி பேசியவர், தவறியும் கூட, “நாய்’ என்று ஒரு முறை கூட சொல்லவில்லை. மனி தாபிமானமிக்க இவரின் சிவாவை யாராவது பார்த்தால், 98842 63713, 99628 89460 என்ற, அலைபேசி எண்களில் தெரிவித்து உதவலாம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top