புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ்ப்பாணத்திலிருந்து மாவிட்டபுரம் சென்ற மினி பஸ்ஸில் மதுபோதையில் நேற்று ஏறிய இளைஞன் செய்த அட்டகாசத்தினால் பஸ் பொலிஸ் பாதுகாப்புடன் செல்ல வேண்டி ஏற்பட்டிருந்தது. யாழிலிருந்து மாவிட்டபுரம் நோக்கி இரவு 7.00
மணிக்கு புறப்பட்ட மினிபஸில் மதுபோதையுடன் இளைஞன் ஒருவர் ஏறியுள்ளார். பஸ் தெல்லிப்பளை சந்தியை வந்தடைந்ததும் குறித்த இளைஞன் தான் இறங்க வேண்டிய வைத்தியசாலை வீதியால் பஸ்யை செலுத்தவில்லை என அட்டகாசம் செய்துள்ளார்.

பொதுவாக எல்ல மின்பஸ்களும் பகல்வேளையில் நோயளர்களின் நன்மைகருதி தெல்லிப்பளை வைத்தியசாலை வரை சென்றே திரும்புவதே வழமை. இரவு வேளைகளில் பஸ் வண்டிகள் எவையும் வைத்தியசாலை வீதியால் சென்று திரும்புவதில்லை. இந்நிலையில் மின்பஸ்ஸில் மது போதையில் இருந்த இளைஞன் மினிபஸ்யை தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு முன் கொண்டுசென்று தன்னை இறக்கிவிட வேண்டும் எனக் கூறி அடம்பிடித்துள்ளார்.

இதன்போது பஸ்ஸில் பயணம் செய்த சகபயணி குறித்த இளைஞனை சமாதானப்படுத்த முற்பட்ட வேளை அது வாய்த்தர்க்கமாக இருந்து பின்னர் கைகலப்பாக மாறியது. இதையடுத்து போதையில் நின்ற இளைஞன் தொலைபேசி அழைப்பு ஊடாக தன்னுடைய நண்பர்கள் பரிவாரத்தை அழைத்துள்ளார்.

இதையடுத்து சுமார் 40 மேற்பட்ட நண்பர்கள் பரிவாரம் தடிகள், பொல்லுகளுடன் தெல்லிப்பளை சந்தியில் மினிபஸ் வரும்வரை காத்து நின்றுள்ளனர். பின்னர் மினி பஸ் வந்ததும் தங்களுடைய நண்பர் செய்த அட்டகாசம் தெரியாது பஸ்யை கொளுத்துவம், உடைப்பம் எனக் கூறி மிரட்டியுள்ளனர்.

இதனால் அச்சம் அடைந்த பஸ்சாரதி பஸ்வண்டியை விரைவாக தெல்லிப்பளை சந்தியிலிருந்து எடுத்துச்சென்று மாவிட்டபுரத்தில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தியுள்ளார். பின்னர் தனியார் போக்குவரத்து சங்க தலைவருடன் தொடர்பை ஏற்படுத்தி அவர் ஊடாக தெல்லிப்பளை பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

இதையடுத்து பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று அங்கு தடிகள் பொல்லுகளோடு நின்றவர்களை அடித்து விரட்டியுள்ளனர். பின்னர் மினிபஸ்ஸில் அட்டகாசம் செய்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். அத்துடன் மினிபஸ் பொலிஸ் பாதுகாப்புடனே சென்றுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top