புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வயதானால் ஏற்படும் பார்வைக் குறைபாடுகளைத் தடுக்க, கண்ணில் சேரும் கொழுப்பு சக்திக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் பெரிதும் உதவும் என்று அமெரிக்காவில் வாழும் இந்திய
வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி ராஜேந்திர ஆப்தே தனது ஆராய்ச்சியின் மூலம் நிரூபித்துள்ளார்.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில், கண் மருத்துவம் மற்றும் பார்வை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இவர், எலிகளின் மீது தனது பரிசோதனையை மேற்கொண்டதில் அவற்றின் பார்வைக் குறைபாடு நீங்கியதைக் கண்டறிந்தார்.

வயது அதிகரிக்கும்போது மனிதனின் ரத்த நாளங்களில் கொழுப்பு சத்து படிவது என்பது இயற்கையாக நடக்கும் ஒரு விடயம்.

ஆனால், கண்ணில் அமைந்துள்ள குறிப்பிட்ட திசுக்கள், கண்ணில் கொழுப்பு சேரா வண்ணம் பாதுகாக்கின்றன என்பதையும் தனது ஆராய்ச்சின் மூலம் கண்டறிந்துள்ளார்.

மேலும் இவரது ஆராய்ச்சி பற்றிய குறிப்பு, திசுக்களின் வளர்சிதை மாற்றம் என்ற ஆராய்ச்சி நூலில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top