புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்த லொறி ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட பொலிஸார், குறித்த லொறியில் பயணித்தவர்கள் தொடர்பில் சாரதியை விசாரித்த போது, அதில் பயணம் செய்த ஒருவர் இடைவழியில்
லொறியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த விடயம் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் தெரிய வருவதாவது, இரவு வேளைகளில் வேகமாக வந்து கொண்டிருந்த லொறியொன்றை பொலிஸார் தடுத்து நிறுத்தி சாரதியிடம் லொறியில் எத்தனை பேர் பிரயாணம் செய்கின்றீர்கள்? எனக் கேட்டதன் பிறகு தான் லொறியில் பயணம் செய்த ஆறு மீனவர்களில் ஒருவர் இடையில் தவறி விழுந்து தலையில் பலத்த அடியினால் அதிக இரத்தம் வெளியாகி மரணமான செய்தி சாரதி மற்றும் ஏனையோருக்கும் தெரிய வந்துள்ளது.

புத்தளம், தொடுவா எனுமிடத்திலிருந்து மீன்பிடி வலைகளுடன் வவுனியா நோக்கி செல்லும் வேளையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இரவு வேளையில் கீழே வீழ்ந்தவரை பொதுமக்கள் புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு 51 வயதான எலஸ்சிங்க என்ற 2 பிள்ளைகளின் மீனவ தந்தை மரணமடைந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக சாரதி மற்றும் லொறி புத்தளம் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top