புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கனடா நாட்டு பெண் ஒருவர் கணவரை விட்டுப் பிரிந்துச் செல்ல உதவிய 2 பெண்களுக்கு சவுதி நீதிமன்றம் 10 மாத சிறை தண்டனை வழங்கியுள்ளது.

சவுதியில் வாழும் பெண்கள் எல்லா நிலைகளிலும் கணவனுக்கு கட்டுப்பட்டுதான் வாழ வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது.

வெளியே செல்லும்போது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடலை மூடிக் கொள்ள வேண்டும். வாகனங்கள் ஓட்டக் கூடாது. நீதிமன்றம், அரசு அலுவலகங்கள் போன்றவற்றிக்கு செல்லும்போது ஆண் உறவினரின் துணையோடுதான் செல்ல வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் சவுதி பெண்களின் மீது திணிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சவுதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துக்கொண்ட கணடா நாட்டுப் பெண் ஒருவர், கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து வாழ விரும்பினார்.

சவுதி சட்டங்கள் அதற்கு எளிதில் இடம் அளிக்காது என்பதால், கணவனுக்கு தெரியாமல் தனது குழந்தைகளுடன் சவுதியை விட்டு வெளியேறி தாய்நாடான கனடாவுக்கு சென்றுவிட முடிவெடுத்தார்.

இந்த முடிவுக்கு அவரது சவுதி தோழிகள் இருவர் உதவி செய்தனர். இதை அறிந்துக்கொண்ட கணவர் கனடா பெண் மீதும் அவருக்கு உதவிய 2 சவுதி பெண்கள் மீதும் பொலிஸில் புகார் அளித்தார்.

பொலிஸார் அவர்கள் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். சவுதி பெண்கள் மீது நடைபெற்ற வழக்கில் நேற்றுமுன்தினம் தீர்ப்பளிக்கப்பட்டது.

நாட்டின் சட்டங்களுக்கு எதிராக கணவனின் அதிகாரத்தையும், உரிமையையும் தடுக்கும் வகையில் கனடா பெண்ணிற்கு உதவியதற்காக பவுஜியா அல் அயுனி, வஜிஹா அல் ஹுவைதர் ஆகிய அந்த 2 பெண்களுக்கு தலா 10 மாத சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top