
கடந்த வியாழக்கிழமையன்று இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. காரிலிருந்து கீழே விழுந்த சிறுவன் மீது பின்னால் வந்த மற்றுமொரு கார் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவசர சேவைக்கு அழைக்கப்பட்ட மருத்துவர்கள் விரைந்து வந்தும் சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவத்தை பார்த்த குழந்தையின் தந்தை மிகுந்த அதிர்ச்சியுடன் காணப்பட்டார்.
மேலும் மகன் மீது காரை ஏற்றிய வாகனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். பின்னால் வந்த வாகனம், ஓட்டுநரின் கட்டுப்பாடின்றி சிறுவன் மீது ஏறியதால் நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என புலனாய்வு துறை மறுத்துள்ளது.