புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

யாழில் தற்போது 15 , 16 வயது மாணவிகளே அதிகம் காதல்வயப்பட்டு, தனது காதலனுடன் சுற்றித்
திரிவதாக கூறப்படுகிறது. பாடசாலை நேரத்தில் வகுப்புகளை கட் அடித்துவிட்டு அவர்கள் பள்ளி சீருடையிலேயே பூங்காவுக்குச் செல்கிறார்கள். இதில் யாழ் சுப்பிரமணியம் பூங்கா முதல் இடத்தை பிடித்துள்ளது. மதிய வேளைகளில் க.பொ.த (சா.த) கல்வி பயிலும் மாணவிகள் கூட தமது காதலனுடன், இப்பூங்காவுக்குள் சென்று காதல் லீலைகளில் ஈடுபடுகிறார்கள். இதனால் பூங்காவுக்கு சிறுவர்களை கூட்டிச் செல்லும் பெற்றோர் பெரும் சங்கடத்திற்கு உள்ளாவதாக கூறப்படுகிறது.

இவர்கள் பாடசாலை நேரத்தில் இவ்வாறு, பாடசாலையை கட் அடித்துவிட்டு செல்வதனை அதிபர்களோ இல்லை ஆசிரியர்களோ கவனிப்பது இல்லையா என்ற அடுத்த கேள்வியும் எழுந்துள்ளது. இதனை பெற்றோர்தான் கவனிக்க வேண்டும் என்ற கடைப்பாடு இல்லை. பாடசாலை நேரம் என்றால், இதற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு கூறவேண்டும் அல்லவா ? ஆனால் யாழில் உள்ள பிரபல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவிகளே இவ்வாறு, பூங்காவுக்கு காதலனுடன் செல்வதாக கூறப்படுகிறது.

இதேவேளை க.பொ.த (சா.த) கல்வி பயிலும் மாணவிகள் பொதுவாக 16 வயதுடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் தம்மை விட அதிக வயது கூடிய ஆண்களுடன் இப்பூங்காவுக்கு செல்வதாக மேலும் அறியப்படுகிறது. சுப்பிரமணியம் பூங்காவின் உள்ளே பல இடங்களில் மறைவான இடங்கள் காணப்படுவதும் இவர்களுக்கு வசதியாக உள்ளது. காவலர்களுக்கு பணத்தை கொடுத்துவிட்டே காதலர்கள் செல்வதாகவும் கூறப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top