ஒருவருக்குப் பிடித்த கலரை வைத்து அவருடைய குணத்தைக் கண்டுபிடிக்கலாம். கலர்புல்லான ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் இதனை படித்து சுய பரிசோதனை செய்து கொள்ளலாம்.
வெண்மை: அமைதிக்கும் சமாதானத்திற்கும் வெண் நிறத்தை உதாரணமாக கூறுவார்கள். வெண்மை விரும்பிகள் சரியான இளமைவாதிகள். எங்கும், எதிலும் முழுமை வேண்டும் என்று
எதிர்பார்ப்பார்கள். எந்த செயலிலும் இறங்குவதற்கு முன்பாக ஆழம் பார்த்து கால்விடுவீர்கள். அதனால் சீக்கிரம் ஏமாறமாட்டீர்கள். பிடிக்கும் என்பதற்காக அடிக்கடி வெள்ளை ஆடை அணியவேண்டாம். ஊரெல்லாம் மழை பெய்து ஒரே சேரும், சகதியுமாக இருக்கிறது!!.
சிவப்பு: ரொம்பவே ஆக்டிவ் ஆசாமிகள் இவர்கள். நத்தை கூட மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகரவேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். இந்த கலர் பிடித்த ஆண்களுக்கு ஒரே மாதிரியான வாழ்க்கை என்றால் கசப்பு. அதிக மன வலிமை இருக்கும். இவர்களின் பலமும், பலவீனமும் அதுதான்.
பிங்க்: சிவப்பின் மென்மைக் குணமே பிங்க். சரியான சுயநலச் சுனாமிகள். தன்னை யாராவது கவனித்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இதற்காக பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு நடிப்பார்கள், ரொம்ப ஜாக்கிரதை.
மெரூன்: வாழ்க்கையில் அடிபட்டு படிப்படியாக ஏறிவந்தவர்களுக்கு மெருன் கலர் மிகவும் பிடிக்கும். தனக்கு உதவி கிடைக்காததால் சுற்றி இருப்பவர்களுக்கு உதவி செய்வார்கள். மெரூன் என்றால் மெச்சூரிட்டி என்று அர்த்தம்.
ஆரஞ்சு: இந்த நிறத்தை விரும்புபவர்கள் சுகவாசிகள். எந்த நேரமும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள். ஆனால் கூட்டணி கவர்ன்மென்ட் மாதிரி எப்போதும் நிலை இல்லாமல் அலைவீர்கள்.
மஞ்சள்: மங்களகரமான மஞ்சள் வர்ணம் பிடித்தவர்களுக்கு புத்திசாலித்தனமும் கற்பனை வளமும் அதிகம் இருக்கும். நகைச்சுவை வளம் கூடுதலாகவே இருக்கும். இதனால் யாரையும் எளிதில் சிரிக்க வைத்துவிடுவார்கள். எங்கும் எப்பொழுதும் முழுச்சுதந்திரமாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் இவர்கள்.
பச்சை: பசுமையை குறிக்கும் பச்சை நிறத்தை விரும்புபவர்கள் மென்மை ப்ளஸ் நேர்மைவாசிகள். உங்களைச்சுற்றி எப்பொழுதும் பத்து பேர் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அமைதியாக இருப்பதையே விரும்புவார்கள். அன்பே இவர்களின் ஆயுதம். இதனை பயன்படுத்தி சுற்றியுள்ளவர்கள் ஏமாற்ற முயற்சி செய்வார்கள் எனவே விழிப்போடு இருப்பது அவசியம்.
கறுப்பு: கிவ் ரெஸ்பெக்ட், ஹேவ் ரெஸ்பெக்ட் பார்ட்டிகள். மரியாதை என்பது மரணம் மாதிரி. நீங்கள் விரும்பாவிட்டாலும் உங்களை தேடி வரும். ஈஸியாக மற்றவர்களை இம்ப்ஸ்ரெஸ் செய்துவிடுவீர்கள்.
வயலட் நிறம்: கொஞ்சம் கலாச்சாரக் காவலர் நீங்கள். புதுமை பிடிக்காது. கட்டம் போட்ட பேண்ட் போட்டுள்ளவர்களைப் பார்த்தால் அலறுவீர்கள். உள்ளுவது உயர்வுள்ளல் ஆனால், வேலை என்று வந்துவிட்டால் குறட்டை விடுவீர்கள்.
வாழ்க்கை முழுக்க ஒரே கலர் பிடிக்காதே… மாறிக்கொண்டே இருக்கிறது என்கிறீர்களா? கலருக்குத் தகுந்த மாதிரி உங்கள் கேரக்டரும் அந்தந்த நேரம் மாறியிருக்கும்!
0 கருத்து:
கருத்துரையிடுக