இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக தங்கி வேலை பார்ப்பதாக கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் அந்த நாட்டின் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது 23 இந்தியர்கள்,
ஒரு பாகிஸ்தானியர்,
கானா நாட்டை சேர்ந்த ஒருவர் ஆக மொத்தம் 25 பேர் சட்ட விரோதமாக அங்கு பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அனைவரும் 19 வயதில் இருந்து 54 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களில் 3 பேர் பெண்கள். அவர்களை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணைக்கு பின் அவர்கள் 25 பேரும் விரைவில் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக