நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.அவர்கள் இந்நோயின் தாக்கத்திலிருந்து காத்துக் கொள்ள முறையான உடற் பயிற்சியையும்,உணவு கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும்.சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய,மிதமாக,தாராளமாக
சேர்த்துக் கொள்ளக் கூடிய உணவு வகைகளை இங்கே பட்டியலிட்டுள்ளேன்.படித்து பயன் பேறவும்.
உணவு கட்டுப்பாடு: நேரம் தவறாமல் கட்டுப்பாட்டுடன் உண்ண வேண்டும்.விரதம் இருத்தல்/அதிகமாக சாப்பிடுதல் இரண்டுமே கூடவே கூடாது.
தவிர்க்க வேண்டிய உணவு வகை:
சர்க்கரை,தேன்,வெல்லம்,தேங்காய் பால்,ஜாம்,ஜெல்லி,கேக்,இனிப்பு பிஸ்கட்,சாக்லேட்,டின்பழச்சாறு,ஐஸ்கிரீம்,பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர் பானங்கள்,கோதுமை கஞ்சி,கேப்பை கஞ்சி,சத்துமாவு கஞ்சி,பழங்களில் மாம்பழம்,அன்னாசி,திராட்சை, மற்றும் உலர்ந்த பழங்கள். கடலை,பாதாம்,முந்திரி,பிஸ்தா பருப்பு வகைகளை தவிர்க்கவும். டால்டா,நெய்,பாமாயில்,தேங்காய் எண்ணெய்யை தவிர்க்கவும்.
அசைவத்தில் organ meats என்று சொல்லப்படுகிற ஈரல்,மூளை,சிறுநீரகம்,இதயம் போன்ற பகுதிகளை தவிர்க்க வேண்டும்.
ஆட்டுக்கால்,கொழுப்பு,முட்டை மஞ்சள் கரு,கோழிக்கறியில் தோலை நீக்கிவிட்டு உண்ணவும்.
காய்கறிகளில் கிழங்கு வகைகளை தவிர்த்தல் வேண்டும்.கருணை,சேனை,சேப்பன்,உருளை,பலாக்கொட்டை,பீட்ரூட் வாழைக்காய்,கேரட்,சர்க்கரை வள்ளிக்கிழங்கு,ஆல்வள்ளிக்கிழங்கு., பீடி,சிகரெட்,மதுபானம் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும்.
மிதமாக சேர்க்க கூடியவை: பழவகைகளில் ஏதாவது ஒன்று மட்டும் ஒரு நாளுக்கு-1/2ஆப்பிள்,சிறிய பச்சை வாழைப்பழம்,2 துண்டு பப்பாளி,தர்பூஸ் 1துண்டு,1சிறிய கொய்யா,1 வாழைப்பழம்.[any one/day].
அசைவம்: வாரத்திற்கு ஒரு முறை [ஏதாவது ஒன்று மட்டும்] முட்டை-1 மீன்-3துண்டு கோழி-150கிராம்.[தோலை நீக்கி விடவும்] ஆட்டுக்கறி-100கிராம் வறுவலை விடுத்து உண்ணுதல் நலம்.
தாராளமாக சேர்த்துக் கொள்ள கூடியவை: பாலில்லாத காபி.டீ,எலும்பிச்சம் பழச்சாறு,மோர்,காய்கறி சூப் வகைகள்.
கொத்தமல்லி,புதினா,குரிஞ்சாக்கீரை,சிறுகீரை,பருப்புக்கீரை,பசலை, மனத்தக்காளி,முருங்கை,அகத்தி,முளைக்கீரை என்று அனைத்து வகையான கீரைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
வெள்ளரி,வாழைத்தண்டு,முள்ளங்கி,கோஸ்,வெண்டை,பீர்க்கு,பூசனி,புடல்,
சுரக்காய் ,பாகல்,காராமணி,அவரை கொத்தவரை,பீன்ஸ்,வெங்காயம்,முருங்கை,தக்காளி,கத்தரி .,
அதிக எடையுடன் உள்ள சர்க்கரை நோயாளிகள் வெண்ணெய்,நெய்,சீஸ் முதலியவற்றை குறைத்து,poly unsaturated fatty acids அதிகமுள்ள எண்ணெய்யை சமையலுக்கு பயன் படுத்தவும்.
0 கருத்து:
கருத்துரையிடுக