"லக்" என்ற இந்தி படம்மூலம் நடிகையாக அறிமுகமான கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன், தெலுங்கிலும் தலைகாட்டிவிட்டு, தமிழில் இப்போது தான் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருக்கும் 7ம் அறிவு படத்தின் ஹீரோயினாக அறிமுகமாகிறார். தமிழில் அறிமுகமாகியிருக்கும் ஸ்ருதியிடம் பேட்டி கண்டபோது, ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவாகவும், விவரமாகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் பதிலளித்தார். பேட்டியின் போது, 7ம் அறிவு படத்தில் இளம் விஞ்ஞானியாக
சுபாஸ்ரீனிவாசன் என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். இந்தபடம் எனக்கு ரொம்பவே சவாலாக இருந்தது. இந்தபடத்திற்காக நிறைய ஹோம்ஒர்க் செய்தேன். அப்பா 50வருஷமா சினிமாவில் இருக்காரு, அதனால என்கிட்ட நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. அப்பாவை பொறுத்தவரை அட்வைஸ் என்ற வார்த்தையை விட உழைப்பை எதிர்பார்ப்பவர். திறமைகளை வெளிப்படுத்த, கிடைத்த வாய்ப்பை நல்லபடியாக பயன்படுத்திக்க விரும்புவார். அப்பாவை போல் நானும், நல்ல திறமையான நடிகையாக நிரூபிக்க முயற்சிப்பேன்.
சென்னையிலேயே பிறந்து வளர்ந்த பொண்ணு நான், முதன்முறையாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்குகிறேன். நிறைய எதிர்பார்ப்போடு என் நடிப்பை, தமிழ் ரசிகர்கள் திரையில் பார்க்க போறாங்கனு நினைக்கும் போது, கொஞ்சம் பதட்டமாகவும், அதேசமயம் ரொம்ப ஆவலாகவும் இருக்கிறது. எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணி, உதவி செய்த டைரக்டர் முருகதாஸ் சார்க்கு இந்தநேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 6ம் நூற்றாண்டுக் கதையில் நானும் இருக்கேன் என நினைக்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது. இந்த முதல்பட வாய்ப்பை நான் என்றுமே என் வாழ்வில் மறக்க மாட்டேன் என்றார்.
0 கருத்து:
கருத்துரையிடுக