தென் ஆபிரிக்காவை சேர்ந்தவரான 22 வயதுடைய தாபோ பெஸ்டர் பேஸ்புக் இணையதளத்தில் ஒரு அறிவிப்பு விடுத்துள்ளார் .பேஸ்புக் இணையத்தளத்தில் தனது பெயர் தாபோ பெல்டர் என்றும் அழகிய இளம் பெண்களுக்கு மொடலிங் வேலை தருவதாக கூறியிருந்தார் .
அதை நம்பி பல பெண்கள் இவரை சந்திக்க
ஹோட்டல்கள் மற்றும் தனி இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியிருந்தார் .
மேலும், பெண்களை அடித்து உதைத்து சித்ரவதை செய்ததுடன் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் உடைமைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார் .
இது குறித்த குற்றச்சாட்டின் பிரகாரம் கைது செய்யப்பட்ட இந்த நபர் மீது டர்லன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட தாபோ பெல்டருக்கு 50 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
அதில் இவன் சமுதாயத்தில் ஒரு ஆபத்தானவன் என தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் ஆண்டுக்கு 56 ஆயிரம் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள்.
எனவே அதை தடுக்க அங்கு இதுபோன்று கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக