அமெரிக்கா என்றால் ராக் அன் ரோல். ஜமைக்கா என்றால் ரெகே. பிரேசில் என்றால் சம்பா நடன மெட்டு போன்ற பல்வேறு நாட்டு இசைப்பாடல்களை கேட்டு ரசிக்க உதவுகிறது ஒரு தளம்.இப்படி ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு இசை மனம் உண்டு. வியட்நாமில் போனால் ஒரு வகையான சங்கீதம்
கேட்கலாம். இத்தாலியிலோ ஸ்பெயினிலோ முற்றிலும் வேறு வகையான இசையை கேட்டு மகிழலாம்.
உள்நாட்டு சங்கீதம் இல்லையென்றால் சர்வதேச அளவிலான பிரபலமான பொப் பாடல்களை கேட்டு ரசிப்பத்தை காட்டிலும் புதுப்புது வகையான இசையை கேட்டு ரசிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் ஜாம்மேப் இணையதளம் உங்களை துள்ளி குதிக்க வைத்துவிடும்.
உலகில் உள்ள எந்த நாட்டின் இசையை கேட்டு ரசிக்க வேண்டும் என்றாலும் இந்த தளம் வழி செய்கிறது. புதிய நாட்டின் பாடலை கேட்டு ரசிப்பதும் எளிதானது தான்.
தளத்தின் முகப்பு பக்கத்திலேயே இதற்கான உலக வரைபடம் தோன்றுகிறது. அதில் நாடுகளை கிளிக் செய்து கொள்ளலாம். ஒரு நாட்டின் இசைக்கான மாதிரியாக தான் இந்த பட்டியல் அமைகிறதே தவிர குறிப்பிட்ட ஒரு நாட்டின் இசை பரப்பை அப்படியே முழுமையாக பிரதிபலிக்ககூடியது என்று சொல்ல முடியாது.
இதற்கு காரணம் பொது காப்புரிமை உள்ள பாடல்கள் மட்டுமே இடம் பெறுவது தான். இருந்தாலும் கூட உலக நாடுகளின் இடையை இருந்த இடத்தில் இருந்தே கேட்டு ரசிப்பதற்கான வாய்ப்பு இசை பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடும்.
அதிலும் உறுப்பினராக சேர வேண்டிய தேவையில்லாமல், எந்த இசை கேட்கும் பிளேயரையும் தரவிறக்கம் செய்யாமல் கிள்க் செய்து மட்டுமே கேட்டு மகிழ்வது உண்மையிலேயே இனிமையான அனுபவம்.
பல நேரங்களில் அருமையான புதிய இசையையும் கூடவே புதிய பாடகர்ளையும் அறிமுகம் செய்து கொள்ளலாம்.
இணையதள முகவரி
http://www.jammap.com/
0 கருத்து:
கருத்துரையிடுக