மஹரகம பிரதேசத்தில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை கைது செய்யாது இருப்பதற்காக பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட ஒருவர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.குறித்த நபர் கங்கொடவில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பெண்ணை கைது செய்வதற்காக அங்கு சென்ற போது குறித்த பெண் தப்பிச் சென்றுள்ளார்.
தப்பிச் சென்ற பெண் அனுப்பிய 50 ஆயிரம் ரூபாவை பொலிஸாருக்கு வழங்க முயற்சித்த நபரே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணிடம் போதைப் பொருளை கொள்வனவு செய்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சத்தை நிராகரித்த மஹரகம பொலிஸ் நிலையத்தின் மூன்று அதிகாரிகளுக்கு பிரதி பொலிஸ் மாஅதிபர் ஐ.எம் கருணாரத்ன சன்மானம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்
0 கருத்து:
கருத்துரையிடுக