உலகில் வாழும் மக்கள் தொகையின் மொத்த எண்ணிக்கை 7 பில்லியனாக அதிகரித்துள்ளதாக ஐ.நா., மக்கள் தொகை கணக்கெடுப்பு மையம் தெரிவித்துள்ளது. உலகில் உள்ள நாடுகளில் குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், ரஷ்யா போன் நாடுகளில் பிறப்பு விகிதம் குறைவாகவும், இந்தியா, சீனா போன்ற நாடுகளில்
இரண்டு குழந்தைகள் வசிப்போரின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் புருண்டி, உகாண்டா போன்ற ஆப்ரிக்க நாடுகளில் அதிகரித்து வரும் பிறப்பு வகிதம் மற்றும் வறுமை போன்றவை கவலையளிப்பாதாகவும் உள்ளது என தெரிவித்துள்ளது. தற்போது ஆப்ரி்க்க கண்டத்தி்ல் 900 மில்லியன் மக்கள் தொகை உள்ளது. இன்னும் 40 ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை 2 பில்லியனாக அதிகரிக்கும் என நியூயார்க் நகரை மையமாக கொண்டு செயல்படும் மக்கள் தொகை கணக்கெடு்ப்பு மையத்தை சேர்ந்த ஜான் போங்கார்ட்ஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச நீர் நிர்வாக மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் 1804-ல் உலகின் மொத்த மக்கள் தொகை 1பில்லியனாக இருந்தது. 123 ஆண்டுகளுக்கு பின்னர் அவை 2 பில்லியனாக அதிகரித்தது. 1959-ல் 3 பி்ல்லியனாகவும், 74-ல் 4 பில்லியனாகவும், 87-ல் 5 பி்ல்லியனாகவும், 98-ல் 6 பில்லியனாகவும் அதிகரித்து வந்துள்ளது. வரும் 2025-ல் 8 பில்லியனாகவும், 2083-ல் 10 பில்லியனாகவும் அதிகரிக்ககூடும் எனவும் தெரிவி்த்துள்ளது.சராசரி மனிதனின் ஆயுட்காலம் 1950-ம் ஆண்டுகளில் 48 வயது என்ற நிலைமாறி நவீன மருத்துவ வசதியால் இன்று 69 ஆக உயர்ந்திருப்பதாகவும் ஆய்வில் தெரிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக