புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

வெளிநாட்டு கப்பல் ஒன்றில் மரணமான இத்தாலிய மாலுமி ஒருவரது சடலம் திருகோணமலை துறைமுக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேஷியாவில் இருந்து இலங்கைக்கு நிலக்கரியினை ஏற்றி வந்த கப்பலில் பணியாற்றிய மாலுமியே மரணமானதாக கப்பல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாலுமியின் மரணம் இயற்கையானதாகவே இருக்கலாம் என தெரிவித்துள்ள
காவல்துறை பேச்சாளர் மக்சி புறக்டர், சடலத்தில் எந்த விதமான காயங்களும் தென்படவில்லை என தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த மரணம் குறித்து, திருகோணமலை மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி, விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.
கப்பலின் தலைவர் மற்றும் இரு கப்பல் அதிகாரிகளின் சாட்சிகளும் பதிவு செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதனை அடுத்து மரணமானவரின் சடலத்தை இத்தாலிக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top