புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


thumbnailதிபெத்தை ஆக்கிரமித்துள்ள சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எட்டாவது நபராக ஒருவர் தீக்குளித்துள்ளார்.கடந்த 1950 முதல் சீனா, திபெத்தை தன் பிடியில் வைத்துள்ளது. திபெத்தின் அரசியல் மற்றும் மதத் தலைவரான தலாய்லாமா இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளார்.
இந்நிலையில், திபெத்தை சீனாவின் பிடியில் இருந்து விடுவிக்கக் கோரி, ஆர்ப்பாட்டங்கள் வலுத்து வருகின்றன.சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தின் அபா பகுதியில், நேற்று 19 வயதுடைய முன்னாள் புத்த மதத் துறவி ஒருவர் தீக்குளித்தார். அவர், முன்பு அபா பகுதியில் உள்ள கீர்த்தி மடாலயத்தில் துறவியாக இருந்தவர்.

தற்போது, திபெத் விடுதலைக்காகச் செயல்பட்டு வருகிறார்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரது உடலில் பற்றியிருந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால், அவர் தற்போது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.கடந்த மார்ச் முதல், இதுவரை ஏழு நபர்கள், சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்துள்ளனர். தற்போது, இவர் எட்டாவது நபராக தீக்குளிப்புப் பட்டியலில் சேர்ந்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top