புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இணையத்தில் எவ்வளவோ வீடியோ மாற்றம் செய்யும் மென்பொருள்கள் கிடைக்கின்றன. சிலவற்றை காசு கொடுத்து வாங்க வேண்டும். சில குறிப்பிட்ட நாட்களுக்கு இலவச சேவை அளிக்கும். ஆனால் இந்த மென்பொருளானது வீடியோக்களை மாற்றம் செய்யும் இலவச சேவையை முழுமையாக
அளிப்பதுடன் அதிக வசதிகளை கொண்டுள்ளது.

இதனை பதிவிறக்கம் செய்து நிறுவியதும் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள Add Video பட்டனை கிளிக் செய்வதன் மூலம் நம்மிடம் உள்ள வீடியோ படங்களை தேர்வு செய்யலாம். இதன் கீழேயே எண்ணற்ற போர்மட்டுக்கள் உள்ளது.

எந்த தரத்தில் படம் வேண்டுமோ அதனையும் நாம் தேர்வு செய்து கொள்ளலாம். ஓடியோ கோப்புகளுக்கான ஸ்கிறீன்சேவரையும் நாம் எளிதில் தேர்வு செய்து கொள்ளலாம்.

இதிலிருந்து நாம் You tube தளத்திற்கு நேரடியாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம். மேலும் நமது வீடியோவினை flv மற்றும் swf கோப்புகளாக மாற்றம் செய்து கொள்ளலாம்.

மேலும் நாம் பார்க்கும் வீடியோவினை வலது இடமாகவும் - மேலும் கீழாகவும் மாற்றிக் கொள்ளலாம். வழக்கமாக புகைப்படத்தில் தான் நாம் இவ்வாறு மாற்ற முடியும். இப்போது வீடியோவிலும் நாம் இதில் எளிதில் மாற்றிக் கொள்ளலாம்.

தரவிறக்க சுட்டி
http://www.4shared.com/file/pr6FMxeT/FreemakeVideoConverterSetup.html

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top