பூமி வெப்பமயமாகி வருவதால் அடுத்த 90 ஆண்டுகளுக்குள் கடல் நீர் மட்டம் 2 அடி உயரும் என கோபன்ஹெகன் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதவாது: உலகம் முழுவதும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன்டை
ஆக்சைடு மற்றும் இதர சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக பூமி வேகமாக வெப்பமயமாகி வருகிறது.
இதனால் அட்லான்டிக் கடல் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது உள்ள நிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டம் 2 அடியும், அதற்கடுத்த 4 ஆண்டுகளில் 6 அடியும் உயரும். இதனால் கடற்கரையை ஒட்டி உள்ள தாழ்வான பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கடல் மட்டம் சில இடங்களில் உயர்வதாலும், சுனாமி ஏற்படுவதாலும் சிறிய தீவுகள் காணாமல் போவதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக