புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இரண்டரை கிலோகிராமிற்கு அதிகமான ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இலங்கையர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.கிடைக்கப்பெற்ற உறுதியான தகவலுக்கமைய, இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் ஊடாக குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.

இலங்கை நோக்கிப் பயணிக்கும் விமானத்தில் ஏறுவதற்கு முயற்சித்த சந்தர்ப்பத்தில் இந்திய பொலிஸாரால் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இலங்கையர் ஹெரோய்ன் போதைப்பொருளை தனது பயணப் பைக்குள் மறைத்து வைத்திருந்தபோது, அவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த போதைப்பொருள் இந்தியாவின் மத்திய பிரதேஷில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படவிருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top