கண்ணில் உற்பத்தியாகக் கூடிய புரதப்பொருள் சதையாக வளர்ந்து கண்ணில் உள்ள விழித்திரையை மறைப்பதனை கண் புரை நோய் எனப்படுகிறது. இந்த புரைநோய்க்கு அவுஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்களால் முதன்முதலாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அடிலெய்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு அறுவை சிகிச்சை இல்லாமல், புரை நோயை நீக்க மருந்து கண்டுபிடித்துள்ளனர்.
அறுவை சிகிச்சையில் பாதிக்கப்பட்ட விழித்திரையை அகற்றி, செயற்கை விழித்திரையை பொருத்துவதே இதுவரை காலமும் தீர்வாக இருந்தது.
இந்த புதிய கண்டுபிடிப்பு மருந்தை, கண் புரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்துவதன் மூலம் கண்ணில் சதை வளர்வது தடுக்கப்படுகிறது.
ஆனால் இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, இந்த மருந்தை பயன்படுத்துவதன் மூலம் கண்ணில் தொடர்ந்து சதை வளராமல் தடுக்க முடியும் என்று அந்த குழுவின் தலைவரான ஆன்ட்ரு பெல் தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக