ரத்கம - எஹேபொலவத்தை பகுதியில் கிரிக்ககெட் மட்டையால் தாக்கப்பட்டு ஒன்றரை வயது குந்தையொன்று உயிரிழந்துள்ளது.குழந்தையின் தாய்க்கும் மற்றுமொரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாயின் கையிலிருக்கும் போதே
குழந்தை தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குழந்தை காலி கராபிட்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளது. சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக