புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உலகளவில் சில பிரபலமான நபர்களின் பிறந்த நாள் மற்றும் சில முக்கியமான நாட்களில் அந்த அறிஞர்களுக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக கூகுள் தனது லோகோவை மாற்றி அமைக்கும்.இந்த சேவையானது Google Doodles  என்று அழைக்கப்படுகிறது. இந்த Google Doodles சேவையை 1998 ஆகஸ்ட் முதல் தொடர்ந்து வருகிறது.

அறிஞர்களை தனது லோகோ மூலம் கவுரவிக்கிறது. இப்படி உருவாக்கப்படும் Google Doodles வாசகர்களை ரசிக்கவும் வைக்கிறது. ஒரு சில லோகோ அனைவரின் மனதையும் கவரும் அனைவரும் இந்த லோகோவே தொடர்ந்து இருக்காதா என நினைப்பார்கள்.
ஆனால் மறுநாளே அந்த லோகோ மறைந்து பழைய படி Google லோகோ வந்திருக்கும். இப்பொழுது கூகுள் வாசகர்களுக்கு ஒரு புதிய வசதியை வெளியிட்டுள்ளது. நீங்கள் நினைக்கும் Google Doodle உங்கள் தேப்பல்ட் லோகோவாக வைத்து கொள்ளலாம்.
இதற்கு எந்த நீட்சியையும் நிருவ வேண்டியதில்லை, எந்த மென்பொருளும் தேவையில்லை. இந்த Google Doodles  லிங்கில் செல்லுங்கள் அங்கு கூகுள் இதுவரை வெளியிட்ட அனைத்து Google doodles வரிசைப்படி அமைக்கப்பட்டிருக்கும்.
அதில் உங்களுக்கு பிடித்த google doodle அருகில் உள்ள Make this my favorite doodle என்ற பட்டனை அழுத்தினால் போதும். அடுத்த கணம் அந்த google Doodle உங்களின் கூகுள் டிபால்ட் கூகுள் லோகோவாக மாறிவிடும்.
இந்த தளத்தில் அனைத்து நாடுகளின் google Doodles இருக்கும். இதில் உங்களுக்கு எது பிடித்து உள்ளதோ அதை உங்களின் கூகுள் டீபால்ட் லோகோவாக வைத்து கொள்ளலாம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top