புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது பல இலட்ச ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களை மறைத்து வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுக்களின் பெறுமதி சுமார் ஆறு இலட்சம்
ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்தபோதே கைது செய்யப்பட்டதாக விமான நிலைய சுங்க அத்தியட்சகர் பராக்கிரம பஸ்நாயக்க கூறியுள்ளார். இவர் கெக்கிராவ பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top