புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிளாஸ்டிக் இல்லாத இன்றைய உலகை நாம் நினைத்து கூட பார்க்க முடியவில்லை .   ஆனால் அதே நேரம் பிளாஸ்டிக் பொருட்களினால் உண்டாகும் சுற்றுசூழல் சீர்கேட்டையும் நாம் அறிந்திருக்கிறோம்.   தற்பொழுது பல இடங்களில் மக்க கூடாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தும் ,  மற்ற பிளாஸ்டிக் பொருட்களை
மறுசுழற்சி செய்தும் வருகிறோம் .   இந்த நிலையில் தான் பிளாஸ்டிக் பொருட்களை எண்ணையாக ( எரிபொருளாக )  மாற்றும் தொழினுட்பத்தை கண்டுபிடித்துள்ளார் ஜப்பானை சேர்ந்த அகிநோரி இடோ என்ற ஆராய்ச்சியாளர்.

இவர் கண்டுபிடித்துள்ள இந்த சாதனத்தின் கொள்கலனில் பிளாஸ்டிக் பொருட்களை போட்டு நன்கு அதை மூடின பிறகு ,   மின்சாரத்தின் துணை கொண்டு அந்த பிளாஸ்டிக் பொருட்கள் உருக வைக்கப்படுகிறது.   அப்பொழுது வெளியேறும் வாயு ஒரு சிறிய குழாயின் மூலம் சேகரிக்கப்பட்டு ,  பின் அந்த வாயு தண்ணீர் உள்ள ஒரு கொள்கலனுக்குள் செலுத்தப்படுகிறது.   அப்படி செலுத்தப்படும் அந்த வாயு தண்ணீரினால் குளிர்விக்கப்பட்டு எண்ணையாக மாறுகிறது.   இந்த எண்ணையை நாம் எரிபொருளாக பயன்படுத்தலாம் என்பது தான் இதன் சிறப்பம்சம்.

 ஒரு கிலோகிராம் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி ஒரு லிட்டர் எண்ணெய் தயாரிக்க முடியும் எனவும் அதற்கு ஒரு கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    இந்த கண்டுபிடிப்பின் மூலம் சுற்று சூழல் பெரிதும் பாதுகாக்கப் படுவதுடன் நமக்கு தேவையான எரிபொருளை ( எண்ணையை ) நாமே தயாரிக்கலாம் என பெருமையுடன் கூறுகிறார் இதை கண்டுபிடித்த அகிநோரி இடோ .

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top