மனதில் நினைத்தாலே கியர் மாறும் வசதி கொண்ட அதிநவீன சைக்கிளை ஜப்பானின் டொயோட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.கார்கள், ரோபோ இயந்திரங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பான் நிறுவனம் டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன்.
இது மற்றும் சைக்கிள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் பார்லீ சைக்கிள்ஸ் நிறுவனம் இணைந்து லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தில் சைக்கிள் தயாரிப்பதற்காக ஆய்வு மேற்கொண்டன.
“டெயோட்டா ப்ரீயஸ் பிராஜக்ட்” என்ற பெயரில் இந்த ஆய்வு நடந்தது. இந்த ஆய்வின் முடிவில் ப்ரீயஸ் பைக் என்ற பெயரில் சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கார்பன் பைபரைக் கொண்டு சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதை ஓட்ட பிரத்யேக ஹெல்மெட் அணிய வேண்டும். மூளையில் ஏற்படும் மாற்றங்கள், அதிர்வலைகள் ஆகியவற்றை அளக்கும் கருவிகள் ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டுள்ளன.
சைக்கிளில் வயர்லெஸ் மைக்ரோ கன்ட்ரோல் கருவி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. மூளை மாற்றத்தை பதிவு செய்யும் கருவியிடம் இருந்து பெறப்படும் தகவலை இதில் உள்ள பிராசசர்கள் மாற்றுகின்றன. மூளை நினைப்பதற்கேற்ப கியர் தானாக மாறுகிறது.
இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: திடீரென ஒருவர் ஏறி உட்கார்ந்து தானியங்கி கியர் சைக்கிளை ஓட்டிவிடுவது கடினம். மூளை அதிர்வுகளை பதிவு செய்யும் கருவி துல்லியமானது என்பதால் அதற்கேற்ப தெளிவாக சிந்திக்க வேண்டும்.
இந்த சூட்சுமம் தெரிந்தவர்கள் எளிதாக ஓட்டலாம். ஸ்மார்ட் போன் தொழில்நுட்பம், ஜிபிஎஸ் வசதிகளும் இந்த சைக்கிளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பைக்கில் இதுபோன்ற வசதியை கொண்டு வருவது குறித்து ஆய்வு நடந்து வருகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக