புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஐம்பொன்னிலான பிள்ளையார் விக்கிரகத்தை திருடிக்  கொண்டு சென்ற சந்தேக நபர்கள் இருவரை யாழ். குற்றத் தடுப்புப் பொலிஸார் யாழ். முத்திரைச் சந்தைப் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளனர். சுதுமலையைச் சேர்ந்த முத்துராசா நந்தன், சாவற்கட்டைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை
ஜேசுரட்ணம் ஆகியோரே பிடிபட்ட சந்கேநபர்களாவர். சாக்குப்பை ஒன்றில் விக்கிரகத்தைச் சுற்றி மறைத்து சைக்கிளில் எடுத்துச் சென்ற போதே அவர்கள் சிக்கிக் கொண்டனர்.
முழங்காவில் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றிலிருந்து இந்த விக்கிரகம் திருடப்பட்டதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை சந்தேக நபர்கள் இருவரும் யாழ். மேலதிக நீதிவான் அ.பிறேமசங்கர் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிவான் 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றின் உத்தரவின் பேரில் பிள்ளையார் விக்கிரகம் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top