புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

வெலிகந்தை, நாகஸ்தென்ன பகுதியில் பொலிஸார் பின் தொடர்ந்து சென்றபோது, தப்பியோடிய சந்தேகநபர் ஒருவர் ஓடையினுள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.புதையல் தோண்டிய சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரே இந்த அனர்த்தத்திற்கு உள்ளானதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சந்தேகநபரைக் கைது செய்வதற்காக பொலிஸார் இன்று அதிகாலை அந்தப் பிரதேசத்தி்ற்குச் சென்றுள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பிச் செல்ல முற்பட்ட சந்தேகநபர் விபத்துக்கு உள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதையல் தோண்டிய சம்பவம் தொடர்பாக மேலும் நான்கு சந்தேகநபர்கள் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top