புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பெண்களில் பாதிப்பேர், 80 வயதில் முதுகெலும்பு முறிவு ஏற்பட்டவர்களாக உள்ளனர். முதுகெலும்பின் மூட்டு பகுதி வரிசை உருக்குலைந்து போய்விடும். இதனால் மூட்டுகள் தேய்மானம் அடைகிறது. இது முதுகெலும்பில் மூட்டு அழற்சியையும், வலியையும் உண்டாக்குகிறது.பெண்களுக்கு மாத விடாய் நின்ற பின்னரும், ஆண்களை வயோதிகத்திலும் அச்சுறுத்தும் நோய், எலும்பு வலுவிழத்தல் நோய் (ஆஸ்டியோபோரோசிஸ்). எலும்புகள் வலு விழப்பதால் நாம் அன்றாட வேலைகளை செய்யும்போது கூட, எலும்பு முறிவு ஏற்படும் ஆபத்து உள்ளது. 

எலும்பு முறிவு ஏற்பட்டால், நமது இயக்கம் முடக்கப் படுகிறது. எனவே, எலும்பு வலுவிழத்தல் நோயை, ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து, உரிய நிவாரணம் பெறுவது அவசியமாகிறது.
எலும்புகள் திரட்சியாகவும் அடர்த்தியாகவும் இருக்கும் வரை தான் வலுவாக இருக்கும். எலும்பு அடர்த்தி மற்றும் வலிமையை பராமரிப் பதற்கு, கால்சியம் சத்து மிக அவசியம். நாம் சாப்பிடும் உணவிலிருந்து கால்சியம் சத்தை உட்கிரகிக்க, எலும்பு செல்களின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்த, இயல்பான எலும்புகளை உருவாக்க, வைட்டமின், “டி’ இன்றியாமையாதது.

எலும்பு ஓர் இயக்காற்றல் கொண்ட உயிருள்ள திசு. நமது உடல் இடை விடாது, புதிய எலும்பை உருவாக்குகிறது. பழைய எலும்பை நீக்குகிறது. குழந்தைப் பருவத்தில், உடலில் இருந்து நீங்கும் எலும்பை விட, புதிதாக உருவாகும் எலும்பு அதிகம். இதனால், எலும்பு வளர்கிறது. ஆனால், 40 வயதுக்கு மேல், புதிதாக உருவாகும் எலும்பை விட, உடலில் இருந்து கழியும் எலும்பு, அளவில் அதிகமாக இருக்கும். இதனால் எலும்பின் திரட்சி, அடர்த்தி குறைந்து வலுவிழக்கிறது. இதுவே ஆஸ்டியோபோரோசிஸ் நோய் (எலும்பு வலுவிழத்தல் நோய்) என அழைக்கப் படுகிறது.
நாற்பது வயதுக்கு பின் ஆண், பெண் இருபாலாருக்கும், எலும்பு அடர்த்தி குறையத் துவங்கும். ஆனால், பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு, எலும்பு அடர்த்தி வேகமாக குறையத் துவங்கும்.

காரணம் என்ன?: பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் (பெண் ஹார்மோன்) உடலில் எலும்புகளை உருவாக்க துணைபுரிகிறது. எலும்புகள் இளம் வயதில் அதிக அடர்த்தியாக இருந்தால், வயதாகும் நிலையில், எலும்புகள் மெதுவாக வலுவிழக்கும். ஆனால், இளமையில் எலும்பின் அடர்த்தி போதுமான அளவு இல்லையெனில், 40 வயதை கடக்கும்போது, பாதிப்பு அதிகமாக இருக்கும்.

எலும்பு வலுவிழப்பதற்கு பொதுவான காரணங்கள்

*பெண்ணாக இருப்பது.
*ஆசிய இனத்தவராக இருப்பது.
*மெலிந்த மற்றும் சிறிய உடலமைப்பு.
*பாரம்பரியம்.
*புகை பிடித்தல்.
*மது அருந்துதல்.
*உடற்பயிற்சி இல்லாமை.
*உணவில் மிக குறைவான கால்சியம்.
*உணவிலிருந்து ஊட்டச் சத்துகள் சரியாக உறிஞ்சப்படாமை.
*பெண் ஹார்மோன் (ஈஸ்ட்ரோஜன்) குறைவாக சுரத்தல்.
*மாதவிலக்கு இல்லாத பெண்கள்.
*மூட்டு அழற்சி, நாட்பட்ட கல்லீரல் நோய்கள்.
*அதிகமாக தைராய்டு சுரத்தல்.
*வைட்டமின், “டி’ பற்றாக்குறை.

அறிகுறிகள்: ஆரம்ப நிலையில் அறிகுறிகள் இருக்காது. ஆனால், எலும்பு வலு குறையக் குறைய அறிகுறிகள் தெரியும். முதுகு வலி, உயரம் குறைதல், கூன் விழுதல், முதுகெலும்பு, மணிகட்டு, இடும்பு எலும்பு அல்லது மற்ற எலும்புகளில் முறிவு ஏற்படுதல்.
இருமினால் கூட முறியும்… எலும்புகள் வலு விழந்து மிகவும் பலவீன மடைந்து விட்டால், சிறு உயரத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டால் கூட எலும்பு முறிவு ஏற்படும். கனமாக பொருள்களை தூக்கினால் கூட, எலும்பு முறியும் ஆபத்துண்டு. சிலருக்கு இருமும்போது கூட எலும்பு முறிவு ஏற்படும். வழக்கமாக எலும்பு முறிவு ஏற்பட்டால், சிறிது நாள்களில் எலும்பு வளர்ந்து வழக்கமான நிலையை அடையும். ஆனால், ஆஸ்டியோபோரோசிஸ் நோய் ஏற்பட்டு, எலும்பு முறிந்தால், எலும்பு சேர்ந்தால் கூட மீண்டும் எலும்பு முறிவு ஏற்படும் ஆபத்துள்ளது. முதுகெலும்பில் எலும்பு முறிவு ஏற்படும்போது , முதுகுத் தண்டின் எலும்பு உயரம் குறை கிறது. இவை அழுத்த எலும்பு முறிவுகள் என்றழைக்கப்படுகின்றன. முதுகெலும்பில் ஏற்படும் முறிவு கூன் போட காரணமாக அமைகிறது. பெண்களில் பாதிப்பேர், 80 வயதில் முதுகெலும்பு முறிவு ஏற்பட்டவர்களாக உள்ளனர். முதுகெலும்பின் மூட்டு பகுதி வரிசை உருக்குலைந்து போய்விடும். இதனால் மூட்டுகள் தேய்மானம் அடைகிறது. இது முதுகெலும்பில் மூட்டு அழற்சியையும், வலியையும் உண்டாக்கு கிறது.

பரிசோதனைகள்: ஆஸ்டியோபோரோசிஸ் நோயை ஆரம்ப நிலையில் கண்டுபிடிப்பது முக்கியம். பெண்கள் மாதவிடாய் நிற்கும் முன், பரிசோதிப்பது நல்லது. பாரம்பரியத்தில் யாருக்காவது நோய் இருந்தால், எலும்பின் அடர்த்தியை பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். எலும்பு அடர்த்தியை கொண்டு, ஆஸ்டியோபோரோசிஸ் நோய் வருவதற்கான வாய்ப்புகளை கண்டுபிடித்து விடலாம். “டூயல் எனர்ஜி எக்ஸ்-ரே அப்சார்ப்ஷியோமெட்ரி’ சோதனை மூலம் எலும்பு அடர்த்தியை சரியாக கணக்கிடலாம். சாதாரண எக்ஸ்-ரே மூலமும் கண்டுபிடிக்க முடியும். ஆனால், 30 சதவீத பாதிப்புக்கு பிறகே, எக்ஸ்-ரே மூலம் அறிய முடியும். பாரம்பரியத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் இருந்தால், முன்னதாகவே மாதவிடாய் வந்தவர்கள், மெலிந்த உடல்வாகு கொண்டவர்கள் எலும்பு அடர்த்தி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கட்டுப்பாட்டுக்குள் வைப்பது எப்படி?: நம் உடலில் போதிய அளவு கால்சியம் உள்ளதா எனத் தெரிந்து, குறைவாக இருந்தால் டாக்டரின் ஆலோசனைக்கு ஏற்ப தேவையான கால்சியம் எடுத்துக் கொள்ள வேண்டும். பால், முட்டை, பச்சை காய்கறிகளில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. கொழுப்பு நீக்கப்பட்ட பால் 4 டம்ளர் குடிப்பதால், 1,200 மி.கி., கால்சியம் சத்து கிடைக்கிறது. கால்சியம் சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால் மட்டும் போதாது.
உணவில் உள்ள கால் சியம் சத்தை கிரகித்து கொள்ள வைட்டமின் “டி’ அவசியம். வைட்டமின் “டி’ சத்தை சூரிய ஒளியிலிருந்து நம் உடல் கிரகித்துக் கொள்கிறது. அதுதவிர முட்டையின் மஞ்சள் கரு, கடல் மீன், ஈரல் ஆகியவற்றில் வைட்டமின் “டி’ உள்ளது. எலும்பை வலுவாக்க உடற்பயிற்சிகள் முக்கிய பங்காற்றுகின்றன. இருப்பினும் நோய் பாதிக்கப்பட்டவர்கள், டாக்டரின் அறிவுரைப்படியே உடற் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். புகைப்பிடிப்பதை கண்டிப்பாக நிறுத்திவிட வேண்டும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top