புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இலங்கையின் போக்குவரத்து துறையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் முதலாவது அதிவேக வீதியான தெற்கு அதிவேக வீதி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இது தொடர்பிலான பிரதான நிகழ்வுகள் இடம்பெறுகின்றது.இந்த வீதியை திறந்து வைப்பது தொடர்பான பிரதான நிகழ்வு காலி தெவட்ட பகுதியில் நடைபெற்றது.சுமார் 95 கிலோமீற்றர் நீளத்தை கொண்டுள்ள தெற்கு அதிவேக வீதியின் முதலாவது பகுதி கொட்டாவையில் இருந்து காலி பின்னதூவ வரை நித்மாணிக்கப்பட்டுள்ளது.

கொட்டாவ - பின்னதூவ வரையான பகுதிக்குள் எட்டு பிரவேச மார்க்கங்கயை கொண்டுள்ளது.இந்நிகழ்வில் விஷேடமாக ஜப்பானிய சமாதானத் தூதுவர் யசூசி அகாசி கலந்துகொண்டார்.அத்துடன் வெளிநாட்டு தூதுவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட அதிக எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top