கனடாவில் லேப்ரடார் நகரத்தின் அருகே உள்ள காடுகளில் மரங்களின் மீது சிறிய ஹெலிகொப்டர் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இருந்தாலும் ஹெலிகப்டரில் இருந்த 54 வயதுடைய ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.ராயல் நியூ ஃபௌண்லாந்து காவல் பிரிவைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஸ்டீபன் பிட்ஜெரால்டு என்பவர் இந்த விபத்து பற்றித் தெரிவிக்கும் போது,
ஹெலிகொப்டரை ஓட்டி வந்தவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு சோதனை முடிந்த பின்பு சில மணி நேரங்களில் வீடு திரும்பினார் என்றார்.
மேலும் தெரிவிக்கையில், லேப்ரடார் நகரத்திற்கு மேற்கே 10 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ரோஸ் ஏரியின் அருகே இருந்த சிறுமரக்காடுகளின் மீது ஹெலிகொப்டர் பறந்த போது கனடிய நேரப்படி காலை 8.40மணிக்கு விபத்தில் சிக்கியதாக தெரிவித்தார்.
போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் ஜுலி லாரோக்ஸ் இந்த விபத்து குறித்து கூறுகையில், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.
0 கருத்து:
கருத்துரையிடுக