புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஆஸ்திரேலியாவின் ஹோல்டன் நிறுவனம் 42 ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைத்த ‘அரிக்கேன்’ கார் லேட்டஸ்ட் தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கார் தயாரிப்பில் 150 ஆண்டு பாரம்பரியம் வாய்ந்த ஆஸ்திரேலிய
நிறுவனம் ‘ஜிஎம் ஹோல்டன்’. கடந்த 1969ல் ஹோல்டன்ஸ் அரிக்கேன் என்ற காரை வடிவமைத்தது. இது 2 பேர் மட்டுமே உட்காரக்கூடிய சொகுசு கார். முழுக்க முழுக்க ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் கதவுகள் அமைக்கப்பட்டன. வர்த்தக ரீதியான தயாரிப்பாக இல்லாமல், தொழில்நுட்பத்தை விளக்குவதற்காக ஒரே ஒரு கார் மட்டுமே அப்போது தயாரிக்கப்பட்டது.

ஜிபிஎஸ் வசதிகள், காரை சுற்றிலும் கண்காணிக்கிற அதிநவீன கேமராக்கள், முழு ஏ.சி. வசதி ஆகியவற்றையும் பொருத்தி அதிநவீன சொகுசு காராக இதை ஹோல்டன் நிறுவனம் மாற்றியமைத்துள்ளது. மெல்பர்னில் நடந்த கார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார், பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதுபற்றி ஹோல்டன் நிறுவன இன்ஜினியர்கள் கூறுகையில், ‘‘காலத்துக்கு ஏற்ப சிற்சில மாற்றங்களை மட்டுமே செய்திருக்கிறோம். 42 ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு வசதிகளுடன் கூடிய காரை தயாரித்தது வியக்க வைக்கிறது. வண்டியின் நடு பகுதியில் இன்ஜினை பொருத்தியிருப்பது சிறப்பம்சம்’’ என்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top